Header Ads

மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டிவிட்டர் பதிவு.


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

நீட் தேர்வின் ஆபத்தைக் குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு.

அரசும், நீதிமன்றங்களும்  என்ன செய்கின்றனவோ அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் அவமதிப்புக்கு இடம் எங்கே வந்தது?

வீடியோ கான்பிரன்சிங் விசாரணை நடப்பது உண்மைதானே?

கொரோனா காலத்திலும் நீட் தேர்வுகள் நடத்துமாறு  தீர்ப்புச் சொல்லப்பட்டதும் உண்மைதானே?

மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, மாணவர்களை பலியெடுத்துக் கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் அதற்கு ஒத்துப் போகலாமா? ...

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதை விட்டுவிட்டு, விமர்சனங்களை முடக்கும் போக்கு ஆபத்தானது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிப்பதாகும்.


No comments

Powered by Blogger.