Header Ads

பாகிஸ்தான், டேட்டிங் செயலிகளை தடை செய்துள்ளது.


 | - முகன்.

உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானில் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் மற்றும் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது. பாகிஸ்தான் மத நம்பிக்கையை பின்பற்றி பாதுகாத்து வருகிறது.

சமீப காலமாக சமூக ஊடகங்களில் பயனாளர்கள், கருத்து என்ற பெயரிலும், திறமையை வெளிக்காட்டுகிறேன் என்ற பெயரிலும் எல்லை மீறி செல்வது வழக்கமாகி விட்டது. நாட்டின் இறையாண்மை, மத நல்லிணக்கம், ஒற்றுமை சீர்குலைக்க படுகின்றன. இதனால் பல நாடுகள் செயலிகளை தடை செய்து வருகிறது.

தவறுதலான கருத்துக்களை பரப்புவதால் டிண்டர்(Tinder), கிரிண்டர்(Grindr), மற்றும் மூன்று டேட்டிங் (டகேட் (Tagged), ஸ்கேஅவுட்(Skout) மற்றும் செ ஹை (SayHi)) செயலிகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் தவறான பதிவுகளை வெளியிட்டதால் டிக் டாக்கிற்கு கடைசி எச்சரிக்கை வெளியிட்டது.

கடந்த காலங்களில் பேஸ்புக், யூடூப், விக்கி பீடியா மற்றும் பிலிக்கர் போன்ற செயலிகளை பாகிஸ்தான் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.