மீண்டும் களை கட்டிய பாபநாசம்...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது பாபநாசம் உலகாம்பிகை அம்மன் சமேத பாபநாசர் திருக்கோவில்.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில்களில் இதுவும் ஒன்று.கொரானா நோய் தொற்றால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தளங்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பாபநாசம் பாபநாசர் கோவிலும் திறக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணமாக உள்ளனர்.
No comments