Header Ads

செட்டிநாடு காரக்குழம்பு....

 


✍️ | மகிழ்மதி.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வற்றல் (மிளகுதக்காளி வற்றல்) - 2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சையளவு

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

தனியா பொடி - 1 தேக்கரண்டி

சோம்பு, சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பல்

தக்காளி - 2

கறிவேப்பிலை (இருந்தால்) - ஒரு கைப்பிடி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு


செய்முறை:

புளியை ஊறவைத்து 2 கிளாஸ் கரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து மிளகு தக்காளி வற்றலை போட்டு பொரிந்தவுடன் உரித்த முழு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, தனியா பொடி, சோம்பு, சீரகப்பொடி போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வதக்கவும்.

புளித்தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

No comments

Powered by Blogger.