லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
தமிழகம், கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை..! கேரள குழுவுடன் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழு இன்று ஆலோசனை.
தேனி மாவட்டத்தில் புதிதாக 78பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை: 13,598.
சென்னை சேத்துப்பட்டில் டி.வி. காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி. வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்தார் விஜய் சேதுபதி.
5 மாதத்தில் 250கோடி இழைப்பை சந்தித்துள்ள அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் நாளொன்றுக்கு 250 பேருந்துகள் மட்டுமே இயக்கும் அளவுக்கு மக்கள் வருகை குறைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மான்கோட் பகுதியில் அத்துமீறி தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி
தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு:
15ஆவது நிதி குழுவின் பரிந்துரைபடி தொகை ஒதுக்கீடு.
மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய மாதாந்திர வருவாய் பற்றாக்குறை நிதி ஒதுக்கீடு. 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
சேலம்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 8,830 கன அடியில் இருந்து 10,045 கன அடியாக அதிகரிப்பு. காவிரி டெல்டா பாசனத்துக்கு 6000 கனஅடி, கிழக்கு-மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700 கன அடி நீர் திறப்பு
நீர் மட்டம் - 91.89 அடி
நீர் இருப்பு - 54.83 டிஎம்சி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 % மாணவர்களை சேர்க்க அரசு அனுமதி. அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தல்
மகாளய அமாவாசயை முன்னிட்டு செப்.15 முதல் செப்.18 வரை சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! - கோயில் நிர்வாகம்
No comments