Header Ads

நெல் மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைத்து சேதம்...அதிகாரிகளின் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு .

✍️ | ராஜாமதிராஜ்.

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே திருமங்கைச்சேரி நெய் குப்பை,  உள்ளடக்கிய ஒன்றிய பகுதிகளில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை,  மற்றும் தாளடி, சம்பா பயிரிட்டு தற்போது குறுவை சாகுபடி அறுவடையும் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திருமங்கைச்சேரி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் முட்டைகள் சாலையோரத்தில் கொட்டி வைத்து விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பெய்த பருவ மழையால் கூடுதலாக சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அவ்வப்போது பருவமழை  பெய்து வருவதால் ஈரப்பதத்தால் நெல் மணிகள் முளைத்து வீணாகி மிகுந்த நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக கவலை தெரிவித்து உள்ளனர்.கடன் வாங்கி பயிர் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரம் வீணாவதைக் கண்டு மனம் பதறுவதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் நெல்மணிகளை விவசாயி தொழிலாளர்களைக் கொண்டு நன்றாக காய்ந்து ஈரப்பதம் இல்லாமல்  இயந்திரத்தின் உதவியால் தூசி உள்பட எடுத்து சுத்தமாக நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அப்படி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திருமங்கைச்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  அட்டியல் போடபட்ட நூற்றுகணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகளில் முளைப்புதிறன் அடைந்தால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்து வருகிறது.

நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கனக்கான மூட்டைகள் மூடும் தார்பாய்கள் தரமில்லாமல்  இருந்து வருவதாலும், போதுமான தார்பாய்கள் இல்லாததும் உரிய இடத்தில் அட்டியல் போடமல்  அதிகாரிகளின் அலட்சியத்தால்  நெல் மூட்டைகள் சேதம் அடைந்து வருவதாக  விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டதாக தமிழக அரசும் அமைச்சர்களும் தெரிவித்தாலும், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பல்வேறு வகையில் கண்காணித்து  தூய்மையாக  கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள்  கொள்முதல் நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து வருவது விவசாயிகளிடையே அதிருப்தியை, ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.