பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
✍️ | ராஜாமதிராஜ்.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக ஆங்காங்கே அரசியல் கட்சிகளின் சார்பாக மற்றும் தொண்டு நிறுவனங்களின் சார்பாகவும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை அணைக்காட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டுக்கோட்டை நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், நாம் தமிழர் கட்சியின்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது இதற்கு மாணவர் பாசறை செயலாளர் திரு.ரஸ்கின்தாமஸ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தொகுதி தலைவர் ரூஸ்வெல்ட் மித்ரா, தொகுதி செயலாளர் வெற்றிசெல்வன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிராக, கையில் கொடிகளை ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பினர்.
No comments