நீட் தேர்வு குறித்த ஸ்டாலின் பேச்சு எடுபடாது..... தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்...
✍️ | ராஜாமதிராஜ்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று இரத்த தான முகாம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது
இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.
மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 70 பாரதிய ஜனதா தொண்டர்கள் இன்று பிரதமரின் 70 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரிக்கு இரத்தக் கொடை வழங்கினார்கள்.
அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நீட் விசயத்தில் ஸ்டாலின் இன்றோ நேற்றோ பேசவில்லை ஒவ்வொரு வருடமும் யாராவது ஒருவர் ஏதாவது வகையில் இறந்துவிட நேர்ந்தால் அதை வைத்துக்கொண்டு பேசுவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது அதைப்பற்றி நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார் .
இந்நிகழ்வில் மண்டபம் நகர் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
No comments