நெய் காய்ச்சும் முறை
✍️ | மகிழ்மதி.
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 500 கிராம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 1
தயிர் - ஒரு சொட்டு
முருங்கைக்கீரை (அல்லது) கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - ஒரு கல்
செய்முறை:
வெண்ணெயில் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, தண்ணீரை வடித்துவிடவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்யை போட்டு கரண்டி போட்டு கிளறவும்.
வெண்ணெய் முழுவதும் உருகியதும் அடுப்பை குறைத்து சீரகம், வரமிளகாய், உப்பு போடவும்.
அடுப்பை அணைத்துவிட்டு முருங்கைக்கீரை (அல்லது) கறிவேப்பிலை போடவும். அதில் ஒரு சொட்டு தயிர் விடவும்.
ஆறியதும் இறுத்து ஈரமில்லாத டப்பாவில் ஊற்றி மூடவும்.
No comments