Header Ads

லீடர் தமிழின் இரவு முக்கிய செய்திகள்

 

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு..! மத்திய நிதி அமைச்சகம்.

* புதிய கல்விக்கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் 21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

* சட்டமன்றத் கூட்டு தொடர் தொடங்க உள்ளதால் அனைத்து எம்.எல் ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை தமிழக எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கொரோனா பரிசோதனை.

* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் -வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ். லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்துக்கு ரிங் டோன் அமைக்க பெற்ற வருமானத்துக்கு வரி ஏய்ப்பு  முயற்சி எனப் புகார்.

* புதுச்சேரி : காட்டேரிகுப்பத்தில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு.

* நாமக்கல் அருகே விவசாயி சேகர் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை.

* திமுகவில் வழங்கப்படும் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு சோடா பாட்டில் பவர்-தான். சோடா பாட்டிலை திறக்கும்போது ஒரு சத்தம் வருமே, அந்த சத்தம் அளவுக்கு தான் அதற்கு அதிகாரம். முக்கியத்துவமோ, தனிப்பட்ட அதிகாரமோ, சுதந்திரமோ கிடையாது.     -வி.பி.துரைசாமி காட்டம்.

* அக்டோபர்-2 வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல்.

* தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு:

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம். 

நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி, சட்டம் - ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் நியமனம்.

நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ், பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் - தமிழக அரசு.

* தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு குற்றப் பின்னணி விவரங்களை வேட்பாளர் மற்றும் கட்சிகள் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையம்.

4 நாட்களுக்கு முன்பு ஒரு முறையும், 5 மற்றும் 8 ஆவது நாட்களுக்குள் 2 ஆவது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3 ஆவது முறையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையம்.

* 2021 தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும்- சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்.

* காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மாற்றம். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்.

* தெலங்கானா காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமனம்.

* ஒடிசா பொறுப்பாளராக செல்லகுமார் நியமனம்.


No comments

Powered by Blogger.