Header Ads

டிவியில் தினமும் நாடகம் மட்டுமே பார்க்க கூடாது 10நிமிடமாவது செய்தியும் பார்க்கணும்... அமைச்சர் கருப்பணன் பேச்சு


 ✍️ | ராஜாமதிராஜ்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் என்ற வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று 1437 பயனாளிகளுக்கு 

ரூ.11.16 லட்சம் மதிப்பீட்டில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கி பேசிய போது:

மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் முதியோர் உதவித்தொகை வாங்க அலைய வேண்டியதில்லை, அதே பகுதியில் ரேசன் கடைகளில் சிரமமின்றி பணம் பெற்றுக் கொள்ளலாம்.

மலைவாழ் மக்கள் குழந்தைகள் எவ்வளவு படிச்சாலும் உணவு உட்பட அவ்வளவும் இலவசம் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல விசயத்தை முன்பே செய்து உள்ளார் என்றார்.

தமிழ்நாட்டில் தான் கொரோனா தொற்றை கட்டுபடுத்தி வைத்ததோடு இழப்பீடும் குறைவு என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், 

டிவியில் தினமும் செய்தி பார்க்கனும் நாடகம் மட்டுமே பார்க்க கூடாது அப்போதுதான் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று சுற்றுச்சூழல்துறை கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.