Header Ads

மேட்டூர் அணை -மேச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டாவது ரயில் பாதையில் அதிவேக ரயில் வெள்ளோட்டம்....


✍️ | ராஜாமதிராஜ்.

மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கும், மேட்டூர் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் அனல் மின் நிலையங்களுக்கும் நிலக்கரி கொண்டு வர ஓமலூர் முதல் மேட்டூர் அணை வரை உள்ள ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற 2011-2012ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன. 

ஓமலூர் முதல் மேட்டூர் அணை வரை 29 கி.மீதொலைவு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.  தற்போது மேச்சேரி ரோடு முதல் மேட்டூர் அணை வரை 17 கி.மீ . தொலைவு இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.   குட்டப்பட்டி, எம்.காளிப்பட்டி., பொட்டனேரி, விருதாசம்பட்டி, பிஎன் பட்டி மற்றும் வீரக்கல் புதூர் ஆகிய ஆறு கிராமங்களை இந்த இருப்பு பாதை கடந்து செல்கிறது.  

இன்றுபிற்பகல் சுமார் 3.30 மணி அளவில்  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மேற்பார்வையில் அதிவேக  சிறப்பு ரயில் மூலம் வெள்ளோட்டம் நடைபெற்றது.  இதற்காக அதிவேக ரயிலுக்கு மேட்டூர் ரயில் நிலையத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனால் இருப்புப் பாதை கடந்து செல்லும் 6 கிராமங்களில் இருப்பு பாதை ஓரம் வசிக்கும் மக்கள் இருப்பு பாதையை கடந்து செல்லும் போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டு மெனஏற்கனவே  எச்சரிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இருப்புப்பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ஓமலூர் சந்திப்பு முதல் மேச்சேரி சாலை வரை எஞ்சிய 12 கிலோமீட்டர் தொலைவு இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும்.

No comments

Powered by Blogger.