திருவாரூரில் உலக வெறிநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது.
✍️ | ராஜாமதிராஜ்.
வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ் நோய். இந்த நோய் 97 சதவீத ரேபீஸ் நோய் நாய்கள் மூலம்தான் பரவுகிறது. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன.
அதில் 60 லட்சம் தெரு நாய்களாகவும் மீதி வீட்டில் வளர்க்கும் நாய் களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவைகள் மூலம் ரேபிஸ் நோய் அதிகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் வண்ணம் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருவாரூரில் உள்ளகால்நடை பராமரிப்பு மருத்துவமனையில் இன்று வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளான நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டார். நிகழ்ச்சியினை ரோட்டரி கிளப் ஆப் டேங்க் சிட்டி திருவாரூர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments