கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் .
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் &ஒழுங்கு) அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் செம்மஞ்சேரி பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட கஞ்சா கைப்பற்றுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
No comments