Header Ads

முக்கிய செய்திகள்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* அரியர் மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு: 

அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும். - அண்ணா பல்கலை அறிவிப்பு.

* தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் சிறிதளவே ஏற்றம்!:

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் றியீட்டு எண்ணான சென்செக்ஸ் 14.23 புள்ளிகள், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 15.20 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டன.

* ஸ்கேன் மையம் திறப்பு: 
மேலுார் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை கழகம் சார்பில் ரூ. 1.50 கோடியில் அமைக்கப்பட்ட சி.டி., ஸ்கேன் மையம் தினமலர் செய்தி எதிரொலியால் திறக்கப்பட்டது. சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் வெங்கடாச்சலம் வரவேற்றார். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், மேலுார் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, சி.எம்.ஓ., ஸ்ரீபிரியா தேன்மொழி, டாக்டர்கள் செந்தில்குமரன், முரளிபால்கண்ணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

* நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை!

* நடிகை வாக்குமூலம் : பிரபல நடிகைகள் சாரா அலி கான், ராகுல் ப்ரீத் சிங் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கண்காணிப்பில்.
மும்பை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் ஊழல் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேரின் ஜாமீன் மனுவை நேற்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆதாரங்களின்படி, போதைப்பொருள்தடுப்பு போலீசார் விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறி உள்ளார். இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.