தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க கதறி துடித்த கொரோனா நோயாளி!
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பாநேரியை சேர்ந்தவர் மின்னலா (78), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது மகன் முருகேசன் கொரோனா தொற்றால் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தாய் இறந்த தகவலறிந்த முருகேசன் கதறி அழுதார். தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கதறினார்.
இது குறித்து மருத்துவ ஊழியர்கள், உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு வந்து முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து, தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றனர். இறுதி அஞ்சலி செலுத்தியபின் மீண்டும் கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
No comments