அவசர சட்ட திருத்தங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க கூடாது பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்..
✍️ | ராஜாமதிராஜ்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டத் திருத்தங்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்துகிறார் மிக மோசமான இச் சட்டத்தை மத்திய அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி எடுத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் கடந்த தமிழக சட்டமன்றத்தில் கூட்டத் தொடரில் இதே ஒப்பந்த சாகுபடி சட்டம் என்கிற பெயரில் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
இந்த சட்டம் கூட மத்திய அரசு உள்நோக்கத்தோடு பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன்னதாகவே தமிழக சட்டமன்றத்தில் மாநில அரசு மூலம்கொண்டுவர செய்து சோதனைக் களமாக கூட தமிழக சட்டமன்றத்தை பயன்படுத்தி உள்ளதோ? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
காரணம் மத்திய அரசு சட்டத் திருத்தம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த போது தற்போது மத்திய அரசு கொண்டு வரும் போது எதிர்க்கும் மு.க.ஸ்டாலின் இதே சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய போது ஏன் அதை எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளது சந்தேகமளிக்கிது.
No comments