Header Ads

மேட்டுப்பாளையத்தில் CITU AITUC தொழிற்சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்தில்   தொழிலாளர்கள் உரிமையை பாதுகாக்க மக்களின் வாழ்வாதாரங்களை காக்க இந்திய மக்களின் பொதுச் சொத்தான பொதுத்துறைகள் அரசுத் துறைகளில் தனியார் மயப்படுத்தும் சீரழிவு நடவடிக்கைகளை உடனே நிறுத்த கோரியும்

44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக முதலாளிகளுக்கு சாதகமாக சுருக்கு வதையும் அதையும் தாண்டி பாஜக ஆளும் மாநிலங்கள் வழியாக வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக உயர்த்துதல் தொழில் தகராறு சட்ட விதிமுறைகளை இன்னும் மோசமாக சீர் குலைத்தல் போன்ற நடவடிக்கைகளை உடனே கைவிடக்கோரியும்

கொரோணா காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய மறுப்பு மற்றும் ஊதிய வெட்டு ஊதியக் குறைப்பு வேலை நீக்கம் உள்ளிட்டவைகளையும் கொரோனா  விற்கு  பிந்தைய கால தொழில் தாவாகளை உடனடியாக எடுத்து அழைத்துப் பேசி தீர்வு காண வலியுருத்தியும்

பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள் உடலுழைப்பு தொழிலாளர்கள் வருமானவரி செலுத்தும் அளவுக்கு வருவாய் எட்டாத குடும்பங்கள் அனைத்திற்கும் ஏப்ரல் மே ஜூன் மாதங்களுக்கு தலா 7500 விதம் 22,500 ரூபாய் நிவாரணம் வழங்கிடக் கோரியும் 

புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டப்படி தொழிலாளர்களை பதிவு செய்வதையும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொள்ள வலியுருத்தியும்

கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் வாரியங்களில் பதிவு செய்ய ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயமாக தொலைபேசி வைத்திருந்து அதை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்ற தன்னிச்சையான கொடூர மாற்றங்கள் செய்த நிபந்தனையை கைவிட்டு OTP கேட்பதை நிறுத்த கோரியும் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணியை துரித படுத்து குண்டும் குழியுமான சாலை களை உடனே சீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு வழி வகை செய்யக் கோரியும் 

புதிதாக திட்டமிடப்பட்டுள்ள கோவை மூன்றாம் குடிநீர் திட்டம் திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்கு பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் இருந்து குடிநீர் எடுக்க வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் பகுதியில் கொரோனா பரி சோதனை மையங்களை அதிகப்படுத்திடவும் கொரோனா நோயாளிகளுக்கு உரிய மேல் சிகிச்சையினை மேட்டுப்பாளையத்திலேயே நடத்திட  வலியுறுத்தியும் 

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைக்கு எதிராகவும்  மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று 23ம் தேதி செப்டம்பர் 2020 காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ் பாஷா தலைமை தாங்கினார் சங்கப் பொருளாளர் சபரி கிரிசன் மற்றும்  சித்திக் ஆகியோர் முன்னிலையில் சங்க துணைச் செயலாளர் சம்சுதீன் பாபு பதுருதீன்  சென்னியம்மாள் ஆனந்தி மற்றும் பலரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுப்பையன் ஜெயசீலன் ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

உப்பு பள்ளம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராஜன் பூபதி உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர் கலந்து கொண்டனர்

AITUC தொழிற்சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AITUC சங்க பொறுப்பாளர் மோகன் தலைமை செல்வம் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்

மேட்டுப்பாளையத்தில் 12 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிமெண்ட் குடோன் ராஜன் பூபதி ஆட்டோ கனி செந்தில் சி டி சி ஜெயசீலன் சுப்பையன் ஜான்சன் குடிநீர் சசிகுமார் சரவணன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் சமூக விலகலை கடைபிடித்து கலந்து கொண்டனர்

No comments

Powered by Blogger.