நெல்லை மாவட்ட திமுக பிரமுகர் வெட்டி கொலை
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரை சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை செயலாளர் முத்துராமன் என்பவர் இன்று இரவு தெற்கு வள்ளியூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வரும் போது மர்ம நபர்கள் பள்ளிக்கூடம் அருகில் காரின் குறுக்கே டிரம்மை உருட்டி விட்டுள்ளனர். காரில் இருந்து இறங்கி டிரம்மை எடுக்கும் போது மறைந்து இருந்த மர்ம நபர்கள் முத்துராமனை சரமாரியாக வெட்டி விட்டு ஒடி விட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் இருந்த முத்துராமனை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் குவிப்பு.
No comments