எஸ்.பி.ஐ அதிரடி சலுகை அறிவிப்பு...
✍️ | மகிழ்மதி.
எஸ்.பி.ஐ தனது இணையதளத்தில், வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்களுக்கும் சலுகை பொருந்தும். மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்கள் இந்த கடன் சலுகையை கோர தகுதி பெற்றவர்கள்.
எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கடன் எண்ணை பதிவு செய்தால் உங்களுக்கான சலுகை விவரங்கள் தெரிய வரும். மாற்றாக வங்கிக்கிளைக்கு நேரில் சென்றும் தவணை சலுகையை பெறலாம். டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சலுகைக்கு விண்ணப்பிக்கலாம். கடன் தவணைகளை 24 மாதம் வரை தள்ளிப்போடலாம். சலுகைக்காலத்திற்கு பிறகு வங்கி கடன் தவணை காலத்தை மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம்.
வேறு கடன்கள் பெறுவதை வங்கிகள் மறுக்க முடியாது. கடன் தவணை மட்டுமே ஒத்திவைக்கப்படுமே தவிர வட்டிக்கு எந்த விலக்கும் இல்லை. தவணைகளோடு வட்டியும் சேருவதால் மாத தவணை தொகை அதிகரிப்பதோடு தவணைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தவணை சலுகை பெறுவோரிடம் 0.35 சதவிதம் வட்டி வசூலிக்கப்படும் எனவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
No comments