Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வம் மர்ம மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம். 

ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிவிப்பும்! இந்த வழக்கு தொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் .

தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் உடைக்கப்பட்ட புகாரில் இருவரை பிடித்து போலீஸ் விசாரணை .

செல்வன் மர்ம மரண வழக்கை சி.பி.சி ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவு

செஞ்சியில் காவல்துறையினர் வாகன தணிக்கையின் போது   இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது மேலும் அவர்களிடமிருந்து 9 பாக்கெட்டில் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செஞ்சி போலீசார் நடவடிக்கை

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை கூட்டம். கட்சி ஒருங்கிணப் பாளர் ஓ.பி.எஸ், செம்மலை எம்.எல். ஏ உட்பட நிர்வாகிகளிடம் ஆலோசித்து வருகிறார்.

வருகிற 28-ந் தேதி நடைபெறவுள்ள செயற்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வீடு திரும்பினார்.

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதில்

"இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது"

"புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து"

பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை

மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில்

No comments

Powered by Blogger.