நலிவடைந்த நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரண உதவி...

✍️ | ராஜாமதிராஜ்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் மூதறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி.நீலமேகம் அவர்களின் அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர் நகர துணை செயலாளர் நீலகண்டன் தலைமையிலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செந்தில்வேல் ஏற்பாட்டிலும் நலிவுற்ற நாதஸ்வர இசை கலைஞர்கள் 200- பேருக்கு நிவாரண பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்கள்.
காய்கறிகள் ஆகியவை அடங்கிய பைகளை வழங்கினர்.இந்நிகழ்வில் புதுக்கோட்டை விவசாய அணி துணை அமைப்பாளர் பழனியப்பன், இளைஞரணி சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
No comments