கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் பாலக்குறிச்சி இளையான்குடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது.

✍️ | ராஜாமதிராஜ்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் அருண் குமார் முன்னிலை வகித்தார். பாலக்குறிச்சி இளையான்குடி பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கீதா ரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், செந்தமிழ்ச்செல்வன், சுதாகர் ஆய்வாளர்கள் ராமமூர்த்தி சிக்கல் வேலவன் மணிகண்டன் பாலக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஷ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ரவிச்சந்திரன் ஒன்றிய கவுன்சிலர் இல்லைன்னு சோபியா சிவபாதம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அருணகிரி சேகர் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments