திருக்குறளை, அரபுமொழியில் மொழிபெயர்த்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை செய்து முடித்திருக்கிறார் -பேராசிரியர் ஜாகிர் ஹுசைன்
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சத்தமில்லாமல், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை செய்து முடித்திருக்கிறார்… சென்னை பல்கலைக் கழக, அரபுத்துறை பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் அவர்கள்.
திருக்குறளை, அரபுமொழியில் மொழிபெயர்த்து, அதன் வெளியீட்டுவிழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நேற்று இணையம் வழியாக நடைபெற்றது. அமைச்சர் க. பாண்டியராசன் நூலை வெளியிட குவைத் நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர் சாலிம் அல்-ருமைதி முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
சவூதி அரேபியா, குவைத், மஸ்கட், துபை, ஷார்ஜா, பஹ்ரைன், கத்தர், அமெரிக்கா, லண்டன், டென்மார்க், சிங்கப்பூர், மலேசியா, கனடா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
-> தமிழிலிருந்து நேரடியாக அரபியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் இலக்கியம் திருக்குறள் என்ற பெருமையும்...
-> சவூதி அரேபியாவில், அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உண்டு.
No comments