Header Ads

முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

மதுரை: மதுரையில் வீட்டுவசதி வாரிய இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதில் தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கிருதுமால் நதி ஓடும் பகுதியையும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சென்னை: விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்


சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் திருடியதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பங்குதாரான ரமேஷ், பணத்தை திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்…


சென்னை: சென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில் சேவை தொடங்க இருக்கிறது என்று ரயில்வே டிஐஜி அருள்ஜோதி பேட்டியளித்துள்ளார். புறநகர் ரயில் சேவை தொடங்கும்போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி: புதுச்சேரி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் இன்று தேர்வு நடைபெறுகிறது


சென்னை: மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த  நிபுணர்களும் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது.


திருவாரூர்: வயலில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் ஈடப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை அளித்தால் விவசாயிக்கு நிவாரணம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி சிவலோகத்தில் 6 செ.மீ., பெருஞ்சாணியில் 4 செ.மீ. மழை பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரில் டிவி ரிப்பேர் ஆனதால் பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிவி பழுதானதால் 9-ம் வகுப்பு மாணவர் பிரைட் ஷாம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


சிவகங்கை: கீழடியில் கண்டறியப்பட்ட 5 அடுக்கு உறை கிணற்றில் மேலும் 12 அடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 17 அடுக்குகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் அடுக்குகள் உள்ளதாக என தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


டெல்லி: உலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கலைஞர்கள் பிரிவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.