Header Ads

மியான்மரில் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள் ஒன்பது பேரில் மாயமான ஒரு மீனவர் - மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 23.08.2020 அன்று மீன்பிடிக்கச்சென்று காணாமல் போய், 54 நாட்களுக்கு பின் மியான்மர் நாட்டு கடற்படையால் விசைப்படகுடன் மீட்கப்பட்ட ஒன்பது காசிமேடு மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர அனைவரும்  கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தற்போது ஒரு மீனவர் மாயமானமாத வந்துள்ள தகவல் சம்மந்தப்பட்ட மீனவர் பாபு குடும்பத்தினரையும் மீனவமக்களையும் மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

மியான்மர் நாட்டில் கொரோனா பேரிடர் காரணமாக, விமானப்போக்குவரத்து மற்றும் நாட்டின் அனைத்து வகையான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு, எல்லைகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளதால், மியான்மர் நாட்டு கடலோர காவல் படையினரால், மீட்கப்பட்ட ஒன்பது மீனவர்களையும், பாதுகாப்பாக கரையில் தங்க வைக்க முடியாத நிலை உள்ளது தெரிந்தும் விரைந்து நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், மாயமான மீனவர் பாபுவை தேடிக் கண்டுபிடிக்கவும்,

மற்ற மீனவர்களை உடனடியாக மீட்டு சென்னைக்கு கொண்டுவர மத்திய,மாநில அரசுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் சார்பில் கோருகிறோம்.

 கு.பாரதி,தலைவர்,

தென்னிந்திய மீனவர் நலச் சங்கம்

No comments

Powered by Blogger.