முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே கோட்டப்பதி ஆற்றில் 85 வயது மூதாட்டி இறந்து கிடப்பதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து விரைந்து வந்த கல்லாவி காவல் ஆய்வாளர் , சாமல்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆற்று நீரில் பாதி மூழ்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்கும் போது உயிருடன் இருந்ததை அறிந்து உடனடியாக சரியான நேரத்தில் முதலுதவி செய்து கைதாங்கலாக போலிசார் சுமார் 1/2 கி.மீ தூரம் தூக்கி வந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பெண் எரித்து கொலை.
* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 924 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 934 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 10,26,960-ஆக அதிகரித்துள்ளது.
* முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் : உள்துறை செயலாளர் பிரபாகர் காவல் துறை தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆலோசனை.
* திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் காலமானார்.
* பிரபல பாடகர் எஸ்பிபி மீண்டும் கவலைக்கிடம். "அவருக்காக பிரார்த்தியுங்கள்" இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் உருக்கமான வேண்டுகோள்.
* சுதந்திர போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தோழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை நேரில் அவரது இல்லத்திற்கு சென்று உடல் நலனை விசாரித்தார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
* எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கேட்டறிந்தார்
No comments