கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். வழிகாட்டுதலை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகத்திற்கு முற்றிலுமாக தடை என்று தெரிவித்துள்ளது.
சாலையோர விற்பனை மற்றும் சந்தைக்குள் பொது இடங்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வது முற்றிலும் தடை. சந்தைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் உடல் வெப்ப சோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படும். அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என்று சி.எம்.டி.ஏ (Chennai Metropolitan Development Authority) தெரிவித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை உரிமையாளர்கள், பணியாளர்கள் வாரத்தில் ஒருநாள் அங்காடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, சுத்தம் செய்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம்.
No comments