Header Ads

மீண்டும் வருகிறார் சசிகலா!!!

 


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அவர் விடுதலை எப்போது? என்கிற பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியில் அவர் அடுத்தமாதம் முதல்வாரம் விடுதலையாவார் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.. சசிகலா விடுதலை தொடர்பான  பணிகளை அவரது வக்கீல்கள் ரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் பெங்களூர் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா காரணமாக கடந்த மார்ச் இறுதியில் இருந்து தமிழகத்தில் இருந்து வக்கீல்களோ, உறவினர்களோ சசிகலாவை சந்திக்கவில்லை. அதேசமயம் கடந்த ஆண்டு அக்டோபரிலேயே சசிகலா, மூன்றில் இரண்டு பங்கு சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். அதாவது சிறை தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி பெற்று விட்டார்.  

கர்நாடக சிறைத் துறை, ஒரு மாதத்திற்கு மூன்று நாட்கள் வீதம், தண்டனை குறைப்பு சலுகை வழங்குகிறது. இது, அனைத்து சிறைவாசிகளுக்கும் பொருந்தும். ஊழல் தடுப்பு பிரிவு குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு, எவ்வித சலுகையும் கிடையாது என, விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இம்மாதம் வரை, 43 மாதங்கள் சிறை வாசத்தை முடிக்கிறார்.

அதன் அடிப்படையில், 129 நாட்கள் தண்டனை குறைப்பு வரும். பரோலில் வந்த, 17 நாட்கள் கழித்து, சிறை விதிகளின் அடிப்படையில், இம்மாதம் இறுதியில், அவர் வெளியே வருவதற்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியிருந்தார். இந்த நிலையில் கோர்ட்டின் அபராதத்தொகையான 10 கோடியை கட்ட சசிகலா தரப்பு தயாராக வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அபராதத்தை கட்டி விட்டு செல்லலாம் என்கிற உத்தரவிற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான உத்தரவை எந்த நேரத்திலும் பெங்களூர் பரப்பன அக்கரஹார சிறை நிர்வாகம் வெளியிடும். உடனடியாக பணத்தை கட்டி விட்டு சசிகலா செல்ல வேண்டியது தான். தன்னுடைய விடுதலை தேதியை சசிகலா முடிவு செய்து வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக அவர் யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.