தற்போதைய லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகளின் தகவலை இணையத்தில் பதிவேற்றும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது
தனியார் முகவர்கள் இணையத்தில் போலியான பெயர், விவரங்களை பதிவேற்றி மோசடி செய்துள்ளனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம்.
ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் - நீதிபதிகள்.
பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்க கூடாது.- நீதிபதிகள்.
அரியர்ஸ் தேர்வு ரத்து வழக்கில் தமிழக அரசு யூ.ஜி.சி ஏ.ஐ.சி.டி.இ பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஆணை.
புதிய திரைப்படங்களை வெளியிட திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை...
க்யூப் மற்றும் யு எஃப் ஓ கட்டணங்களை இனி செலுத்த முடியாது என திட்டவட்டம்.
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவே இறுதியானது! சென்னைப் பல்கலை. துணைவேந்தர் கௌரி.
No comments