வரலாற்று ஆர்வலர்களுக்கு இணையவழியில் கட்டணமில்லா கல்வெட்டுகள் வாசிக்கும் பயிற்சி முகாம் நடத்திவருகிறது.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
இணைவழிக் கல்வெட்டுப் பயிற்சி முகாம்..
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் என்னும் அமைப்பு, வரலாற்று ஆர்வலர்களுக்கு இணையவழியில் கட்டணமில்லா கல்வெட்டுகள் வாசிக்கும் பயிற்சி முகாம் நடத்திவருகிறது.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் " கிரந்தம் " கல்வெட்டுப்பயிற்சி 30 நாட்கள் நடந்தது.
தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்று ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 72 பேர் பங்கேற்றனர்.
இவர்கள் இணையவழியில் கிரந்தக் கல்வெட்டுகள் வாசிக்கும் பயிற்சி பெற்றனர்.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
23.09.2020.மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ஆவடிக்குமார் தலைமை தாங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
பயிற்சி முகாமின் பயிற்றுநர் திருமதி.சௌந்தரி ராஜ்குமார் அவர்கள் தேர்ச்சி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கினார்.
சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கத்தின் செயலாளர் கு.கரிகாலன் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். சங்கத்தின் பொருளார் திரு.மணிவண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி நன்றி கூறினார். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கத்தின் பொறுப்பாளர்கள்..
திருமதி ரூத், திரு.மாரிராஜன், திரு. பாபு , திரு.விக்னேஷ்வர், திரு.விஜய்பட், திரு.பாலகுமாரன், திரு.பாரதி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
No comments