தேசிய நிர்வாகிகள் 2வது பட்டியல் தமிழக தலைவர்களுக்கு இடம். -பாஜ தலைவர் எல்.முருகன் தகவல்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
தேசிய நிர்வாகிகளின் 2வது பட்டியலில் தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூறினார். பாஜவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழக தலைவர் எல்.முருகன் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து எல்.முருகன் அளித்த பேட்டியில்,” தமிழகத்தில் கட்சியை எந்த விதத்தில் வழி நடத்துவது என்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை அவர் வழங்கியுள்ளார். தேசிய நிர்வாகிகள் பட்டியல் இன்னும் முழுமை அடையவில்லை. அதனால் தமிழகத்தை சார்ந்தவர்கள் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்.
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜ தொடங்கி விட்டது என நிச்சயமாக கூற முடியும். அதன் அடிப்படையில் தற்போது பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணியானது நடந்து வருகிறது. இதில் தேர்தல் முடிந்த பின்னர் அமைச்சரவையில் இடம் கேட்பது குறித்து கட்சி தலைமையுடம் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
No comments