கல்பனா சாவ்லா விண்கலம் வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி, வெற்றிகரமாக இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட சிக்னஸ் கார்கோ விண்கலமானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான 8 ஆயிரம் பவுண்ட் எடையிலனா பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் விர்ஜினியாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் 2 நாள் பயணத்திகு பிறகு திங்கட்கிழமை அன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய உள்ளது.
முன்னதாக, கடந்த வியாழனன்று இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments