மிருகத்தனமாக போலீஸ் தாக்கியதால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்” - சிபிஐ
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* தமிழகம், புதுவையில் அக்டோபர் 28ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல். - சென்னை வானிலை ஆய்வு மையம்.
* மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! தமிழக அரசு, அரசியல் கட்சிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால நிவாரண கோரிக்கை நிராகரிப்பு.
* இடஒதுக்கீடு பறிப்பு! வைகோ கண்டனம்!!
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும்.
இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
* அக்டோபர் 27 : சென்னையில் 26வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை.
* தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல். -ராமேஷ்வரம்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதலில் தலையில் மீனவர் ஒருவருக்கு பலத்த காயம் அடைந்ததால், மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
* தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 4 நேபாளிகள் கைது.
தெலுங்கானாவில் நச்சாரம் பகுதியில் எச்.எம்.டி. நகரில் சித்தபுளுசு பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயுள்ளன. இதுபற்றி போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.
இதன்பேரில் 15 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மஞ்சு (வயது 35), ஹேம்பிரசாத் (வயது 44), சாத் (வயது 42) மற்றும் விஸ்னா சுனார் (வயது 40) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அனைவரும் நேபாள நாட்டினர்.இவர்களில் மஞ்சு மற்றும் கசேரா என்பவர் தம்பதி என அறிமுகப்படுத்தி கொண்டு பிரதீப்பின் வீட்டில் பணியாளாக சேர்ந்துள்ளனர். சம்பவத்தன்று பிரதீப்பின் தாயாருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்து உள்ளார். இதனை பயன்படுத்தி வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.49 லட்சம் மதிப்பிலான தங்கம், 2 கைக்கெடிகாரங்கள், தூக்க மாத்திரைகள் கொண்ட அட்டை, மொபைல் போன் ஒன்று ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
* திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த கிளம்பிய குஷ்பு கைது. காரில் சிதம்பரம் நோக்கி சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது.
* திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு. 6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழப்பு.
* தயாராகும் தீவுத்திடல்: நவம்பர் 6-15ஆம் தேதி வரை 10 நாட்கள் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள். திடலில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அனுதிக்கப்படாது. காலை 6-இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும். - சுற்றுலாத்துறை.
* தஞ்சையில் ராஜராஜசோழனின் 1035 வயது சதய விழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு 48 மங்கல பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
* “மிருகத்தனமாக போலீஸ் தாக்கியதால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்” - சிபிஐ.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி.
இருவரின் ரத்தக் கறைகளும் காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது-சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கை.
* பெண்களைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம் பி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் நாளை 27ஆம் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடிகை குஷ்பு பேசும் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது பிரச்சனை சம்பந்தமாக சிதம்பரம் ரயில் நிலையம் எதிரில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகராஜன் விழுப்புரம் கடலூர் போலீஸ் சரக டிஐஜி எழிலரசன் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அபிநவ் தலைமையில் போலீசார் ஆலோசனை சிதம்பரத்தில் பரபரப்பு.
* கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு. நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
* இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி-20 அணியில் இடம்பெற்றார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, வாழ்த்துகள்! தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.
* வெங்காயத்தை திருடியவர்கள் கைது! புனேயில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள 58 வெங்காய மூட்டைகளை திருடிய 4 பேர் கொண்ட கும்பல் கைது! 49 வெங்காய மூட்டைகள் பறிமுதல்; மீதம் உள்ள வெங்காய மூட்டைகளை விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
* கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், விசிக தர்ணா போராட்டம். விடுதி தடுப்பை விசிகவினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதற்றம். பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு - போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.
No comments