லீடர் முக்கிய செய்திகள்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* இந்தியாவுக்கான பேஸ்புக் பொதுக் கொள்கை பிரிவு இயக்குநர் ஆங்கிதாஸ் ராஜினாமா. பேஸ்புக் பதிவுகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்த புகாரில் சிக்கியவர் ஆங்கிதாஸ். பொதுச் சேவையில் ஈடுபடுவதால் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகல் - ஆங்கிதாஸ்.
* அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். - சென்னை வானிலை மையம்
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!
* முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியின் தூத்துக்குடி பயணம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு.
No comments