Header Ads

சென்னை ஆயிரம் விளக்கில் வாடகை பிரச்சினையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகாரின்பேரில் அங்கு வந்த போலீஸார் 20 பேரை பிடித்து கைது செய்தனர்.


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை ஆயிரம் விளக்கில் வாடகை பிரச்சினையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் கடையை சூறையாடி பொருட்களைத் திருடிச் சென்றது. பொதுமக்கள் புகாரின்பேரில் அங்கு வந்த போலீஸார் 20 பேரை பிடித்து கைது செய்தனர்.

சூறையாடிய கும்பலில் முக்கியமான நபர்கள் ஒரு பாஜக கட்சியில் பொறுப்பு வகிப்பவர்கள் என்பதும், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அவர்களே ஆட்களை கூட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.

பிடிபட்ட 20 பேரில், 19 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வட மாநிலங்களில் இது போன்று கட்டைகளை கொண்டு வந்து கும்பலாக கடைக்குள் புகுந்து சூறையாடுவார்கள். தற்போது அதே கலாச்சாரம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பரவுவது சட்டம் ஒழுங்குக்கு நல்லதல்ல என  பொதுமக்கள் கருத்து.

No comments

Powered by Blogger.