காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவினருக்கு மடிக்கணினிகள் வழங்கினார்...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
இன்று 08.10.2020, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், 01.8.2020 முதல் 12 சென்னை பெருநகர காவல் மாவட்டங்களில் சிறப்பு சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு, பொதுமக்களின் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட சைபர் குற்றப்பிரிவின் புலனாய்வை மேம்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கும் ஒரு மடிக்கணினி என 12 மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் காவல் ஆணையாளர் அவர்கள் சைபர் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
No comments