இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
* திண்டுக்கல்லில் தி.மு.க. பிரமுகர் அருணை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் - திருச்சி சாலையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. பிரமுகர் அருணை நேற்று காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் தலை மற்றும் உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
* ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை தியாகராயர் நகர் நகைக்கடையில் நடந்த கொள்ளை குறித்து தனிப்படையுடன் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொள்ளையர்களை விரைவாக பிடிப்பது தொடர்பாக அறிவுரைகளை காவல் ஆணையர் வழங்கியுள்ளார். நகை பட்டறை அதிபர் ராஜேந்திரகுமாரிடமும் கொள்ளை பற்றி ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கேட்டறிந்தார்.
* திருவள்ளூர்: திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதி மக்களுக்கு ஆட்சியர் மகேஸ்வரி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் 900 கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
* புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விஷவண்டுகள் கடிதத்தில் விவசாயி ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விஷவண்டுகள் கடிதத்தில் படுகாயம் அடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* சிவகங்கை மாவட்டத்தில் கடத்தப்பட்ட மகளை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 21ல் மானாமதுரை அருகே இடைக்காட்டூரை சேர்ந்த லட்சுமணன் மகள் கீர்த்திகா(21) 6 பேரால் கடத்தப்பட்டார். மகள் கடத்தப்பட்ட போது காயம் அடைந்த சகோதரன் அஜய், தாய் கலைச்செல்விக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 26ல் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதால் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்.
* கரூர்: தோகைமலை அருகே சிறுமையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெயராஜ் என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனையடுத்து கடத்தலுக்கு உதவிய மேலும் 10 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளனர்.
* திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்தது. வேங்கிக்கால், அடி அண்ணாமலை, நல்லவன்பாளையம், இனாம் காரியந்தல், ஏந்தல் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
* சேலம்: ஆத்தூர் அருகே உள்ள நடுவலூரில் குட்டையில் நீரில் மூழ்கி சிறுவன் மதன் (14) உயிரிழந்துள்ளார். கை, கால் அலம்ப சென்ற சிறுவன் மதன் நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.
* கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் கமால் பாஷா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் தீ விபத்து.!சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
* கோவை க.க.சாவடி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை: 4 பேர் மீது வழக்குப்பதிவு.
* நாமக்கல் ராசிபுரத்தில் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அச்சத்தில் மருமகள் கிணற்றில் குதித்து தற்கொலை!
* மதுரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் டாக்டர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் துணை இயக்குனர் தென்மண்டலம் திரு சரவண குமார் தலைமையில் மாவட்ட அலுவலர் மதுரை கல்யாண குமார் முன்னிலையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் வைத்து துவங்கப்பட்டு தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் முடிவுற்றது.
* கடலூர் அருகே கோதண்டராமபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜசிங் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு பணம் வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ84,000 ரூபாய் பறிமுதல்.
* மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் வாலிபர் வெட்டிக்கொலை.
* விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக பல்வேறு தரப்பு புகாரின் பேரில் நடவடிக்கை.
* வேலூர் மாவட்ட ஆட்சியர் பொன்னை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம்.காட்பாடி அடுத்த கீரை சாத்து பொன்னை அணைக்கட்டு ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பொன்னை ஆற்றின் அணைக்கட்டு நிரம்பி உபரி நீர் அணைக்கட்டின் கிழக்கு மற்றும் மேற்கு புற கால்வாய்கள் வழியாக திறக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தேன்பள்ளி, வள்ளிமலை ,இளையநல்லூர் , குகையாநல்லூர் திருவலம் ,காரணம்பட்டு, தாங்கள் ஆகிய கிராம மக்கள் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* சமநீதி காக்க, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து தான் கடந்த 21.3.2020 அன்று சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் "அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும்" என அறிவித்தேன்.- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் திரு எடப்பாடி கே. பழனிசாமி.
* 2020 அக்டோபர் 24, காலை 11.00 மணி, வெங்காய விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்.
No comments