Header Ads

அமித்ஷாவை நலம் விசாரித்தால் பாஜகவில் இணையப் போவதாக அர்த்தமா..? - குஷ்பு ஆவேசம்.


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

* போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய், தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


* நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோ ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.


* சென்னை நீலாங்கரை பகுதியில் திரைப்படம் தயாரிக்க பண உதவி செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.40 லட்சம் மோசடி செய்த புகாரில் நிஜாமுதீன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.


* திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது எடுக்கப்பட்ட மணல் எந்த வகையைச் சார்ந்தது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எத்தனை யூனிட் மணல் அங்கிருந்து எடுக்கப்பட்டது?, எத்தனை லாரிகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது?. மேலும் சுடலைக்கண்ணு என்பவரின் வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


* ஆழியாறு அணை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.


* திட்டமிட்டபடி அக்.7 ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது உறுதியாகியுள்ளது


* பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் - நயினார் நாகேந்திரன் உறுதி.


* தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.


* எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை


* பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என நீதிபதிகள் அறிவுரை


* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு


*சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரிய வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


* பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் - ஸ்டாலின்.


* செங்கல்பட்டு அருகே பெரியநத்தம் காத்தான் தெரு பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று மின் கம்பத்தில் அடிபட்டு கீழே சாலையில் விழுந்து பறக்க முடியாமல் தினறியது இச்சம்பவம் அப்பகுதியில் தீயாய் பரவி சிறுவர்கள் பொதுமக்கள் கூடி ஆச்சரியத்துடன் பார்த்ததோடு அதை மீட்டு அருகில் உள்ள மலைப்பகுதியில் கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


* எழுத்துத்தேர்வு முறைகேடு விசாரணை முடியும் வரை எஸ்.ஐ பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.


No comments

Powered by Blogger.