திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வன உயிரின வார விழா...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
தமிழ்நாடு வனத்துறை திருச்சிராப்பள்ளி வனக்கோட்டத்தின் சார்பாக வன உயிரின வார விழா விற்கான ஓவியப்போட்டி ஆன்லைன் (E mail) மூலம் திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
1.குரூப் A - LKG முதல் I வகுப்பு வரை.
2.குரூப் B - II முதல் V வரை
3.குரூப் C - VI முதல் VIII வரை
4.குரூப் D - IX முதல் XII வரை
5.குரூப் E - கல்லூரி மாணவர்கள்
6.குரூப் F - சிறப்பு வகை மாணவர்கள் ( ஊனமுற்ற மாணவர்கள்)
ஓவியப்போட்டிக்கான தலைப்பு:
வளமான எதிர்காலத்திற்கு வனஉயிரினங்களை மதிக்கவும்
ஓவியப்போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் தலைப்பிற்கேற்ற ஓவியத்தை வீட்டிலேயே வரைந்து (ஓவியத்தின் மேற்புறம் பெயர்,வகுப்பு,பள்ளியின் பெயர், மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிடவும்) அக்டோபர் 7 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்பாகவோ wlwctrichy2020@gmail.com என்ற E mail ID க்கோ அல்லது https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhpYyLY46O5KuILYSewn4DRnmq_4o7yG47VXktGN737-6j8A/viewform?usp=sf_link என்ற வலைப்பக்கத்திலோ அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் இ சான்றிதழ்களும் வழங்கப்படும்.
No comments