தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்!
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் வெற்றிவேல் உருவ படத்திற்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். அமமுக பொருளாளர் வெற்றிவேல் உருவப்படத்திற்கு பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் சி.ஆர்.சரஸ்வதி, செந்தமிழன் உள்ளிட்டோரும் வெற்றிவேல் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
* ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.
* ஆர்.வெற்றிவேல் மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஆர்.வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அ.ம.மு.க.-விற்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். -கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்.
* தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்! கைரேகையை பதிவு செய்து பொருள் வழங்குவதில் சர்வர் பிரச்சினை எதிரொலி. மீண்டும் பழைய முறையில் ரேஷன் கார்டுகளை ஸ்கேன் செய்து பொருள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் பயோ-மெட்ரிக் காரணமாக தாங்கள் பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் புகார்.
* மண்டல வாரியாக திமுக கலந்துரையாடல் கூட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
* 16.10.2020 காலை பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில், வாழும் கட்டபொம்மன் மதிப்புமிகு மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் சார்பில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.இரமேஷ், புதுக்கோட்டை செல்வம், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.கவினர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
* 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு.
* ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது. திரையரங்கு குழுமம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆன் லைன் முன்பதிவு கட்டணத்துக்கும் கேளிக்கை வரி விதிக்கும் வகையில் கேளிக்கை வரி கணக்கை மறு மதிப்பீடு செய்யும் உத்தரவு ரத்து- உயர்நீதிமன்றம்.
* கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை தமன்னா வீடு திரும்பினார்.
No comments