சிங்கள நடிகர், நடிகைகள் இந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும்பொழுது கூட திரைப்படத்தைத் திரைப்படமாக பார்க்கும் தெளிவு இருந்தது..
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
முத்தையா முரளிதரன் சிங்கள பேரினவாத அணிக்காக விளையாட சென்னை வந்தபொழுதும், தமிழக மறுமகனாக மாறிய பின், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக சென்னையில் விளையாடிய பொழுதும் கூட எதிர்த்ததில்லை. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்த்தோம்.

சிங்கள நடிகர், நடிகைகள் இந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும்பொழுது கூட திரைப்படத்தைத் திரைப்படமாக பார்க்கும் தெளிவு இருந்தது. சிங்கக்கொடி தாங்கி நிற்கும் முத்தையா முரளிதரனின் உடை அணிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு 'வெள்ளைப்பூசும்' சூழ்ச்சியை தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்படக்கூடிய நடிகரை முன்னிறுத்தி, தமிழ் நாட்டில் அவர்கள் திணிக்க நினைக்கும் அரசியலை அரசியலாகத்தான் பார்க்க முடியும்..
விளையாட்டை விளையாட்டாகவும், திரைப்படத்தை திரைப்படமாகவும் பார்க்கவும் என 'பாடம்' எடுப்பதை நிறுத்தி விட்டு அரசியலை அரசியலாகப் பார்க்கவும். -முனைவர் விஜய் அசோகன் சுவீடன்.
No comments