தினசரி காலண்டர் மற்றும் இன்றைய ராசி பலன்!!!
✍️ | மகிழ்மதி.
ஸ்ரீ சார்வரி ஆண்டு – புரட்டாசி 23 - வெள்ளிக்கிழமை (09.10.2020)
நட்சத்திரம் : திருவாதிரை இரவு 9.01 வரை பின்னர் புனர்பூசம்திதி : சப்தமி பகல் 1.27 வரை பின்னர் அஷ்டமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 9.15 - 10.15 / 4.45 - 5.45
வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்.
மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்லவும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் அடங்கும். கூட்டு, தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
ரிஷப ராசி நேயர்களே, சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். நல்லதையும் கெட்டதையும் சமமாக எடுத்துக்கொள்ளவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி ராசி அன்பர்களே, சுற்றி இருப்பவர்களிடம் நன்கு பேசி பழகுவது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர்.
துலாம் ராசி அன்பர்களே, நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெறும். சொந்த பந்தங்களால் இருந்த நெருக்கடிகள் குறையும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிக ராசி அன்பர்களே, எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வரும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு ராசி நேயர்களே, பிரியமானவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உடன்பிறப்பு வகையில் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் பனிப் போர் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தன லாபம் உண்டு.
மகர ராசி நேயர்களே, வேகத்தை விட விவேகம் அதிகம் இருக்கும். உறவினர்கள் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிரிகள் விலகி நிற்பர். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மீன ராசி நேயர்களே, எடுத்த வேலையை சிறப்பாக செய்ய முடியும். பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
No comments