லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
* ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு.
கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும்- மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை ஆளுநரை சந்திக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ஆளுநருடன் சந்திப்பால் பரபரப்பு.
* கொரோனா சமயத்தில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டியதின் அவசியம் என்ன?:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களையும் குப்பைத்தொட்டியில் வீசுவோம்.
- ராகுல்காந்தி.
* ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். - ராகுல்காந்தி.
* அருணாச்சல பிரதேசம்: சாங்லாங்கில் உள்ள டெங்மோ அருகே பயங்கரவாதிகள் தண்ணீர் டேங்கரைத் தாக்கியதில் அசாம் ரைபிள்ஸ் ஜவான் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
* 2 ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை
2 ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் 2017ஆம் ஆண்டு விடுதலை
ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி ஹைகோர்ட்டில் அப்பீல்
* தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவு.
No comments