குளத்துக் கரையில் வீடுகட்டும் முன்னாள் திமுக கவுன்சிலர்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் அழகுபட்டி கிராமத்தில் உள்ள குளத்துக் கரையை ஆக்கிரமித்து முன்னால் திமுக கவுன்சிலர் ஒருவர் வீடுகட்டி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பொது மக்கள் பயன்படுத்தும் பாறையை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள இவர் தற்போது அதே பகுதியில் உள்ள குளத்தின் கரையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும என்ற நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் காலம் தாழ்த்திவருதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க இருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
No comments