சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற போவதில்லை. - முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* அக்டோபர் 3: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.75.95க்கு விற்பனை!!
சென்னை : சென்னையில் 12-வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் நேற்று குறைந்து நிலையில் இன்று மாற்றமின்றி 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
* உலகளவில் கொரோனாவால் 10,32,712 பேர் பலி: 3.84 கோடி பேர் பாதிப்பு.
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,32,712 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 34,817,852 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,885,375 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,237 (பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* ராகுல் காந்தி கீழே விழுந்தது சித்தரிக்கப்பட்டதுபோல உள்ளது. - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.
* இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருகிறோம்: -உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
* ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி.
* நேற்று இரவு 09:24 மணி அளவில் பூட்டான் திம்புவிலிருந்து தென்மேற்கில் 82 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து 583 இந்தியர்கள் சென்னை வருகை;
சென்னை: சிங்கப்பூரிலிருந்து 172 இந்தியர்களும், அபுதாபியிலிருந்து 142 இந்தியர்களும், கத்தார் நாட்டின் தோகாவிலிருந்து 142 இந்தியர்களும், துபாயிலிருந்து 127 இந்தியர்களும் மொத்தம் 583 பேர் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை, சுங்கம், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அவரவர் வீடுகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments