Header Ads

இன்றைய முக்கிய செய்திகள்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

* 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி. பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி.

அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் - தமிழக அரசு.

* சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய தமிழக அரசு அனுமதி.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவ.16 முதல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த தமிழக அரசு அனுமதி.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நவ. 10. முதல் செயல்பட அரசு அனுமதி.

* தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

* புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி: இ-பாஸ் அனுமதி பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பு. இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் - தமிழக அரசு.

* மத்திய உள்துறை அமைச்சரின் 2020-ம் ஆண்டுக்கான சிறப்பு புலனாய்வு நடவடிக்கை-க்கான விருதுக்கு தமிழக காவல்துறையைச் சேர்ந்த சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், எஸ்.பி.க்கள் மகேஷ், அரவிந்த, டிஎஸ்.பி. பண்டரிநாதன், இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

* ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி (வயது 90) உடல்நலக்குறைவால் காலமானார்!.

No comments

Powered by Blogger.