சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* சென்னையில் 19வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை.
* சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை. வரத்துக்குறைவால் ரூ.80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.20 முதல் ரூ.30 உயர்வு.
* முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் இல்லத்தில், அவரது தாயார் தவுசாயம்மாள் உருவ படத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ எம்பி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் துக்கம் விசாரித்தார்.
* பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.45 என்ற விலையில் நாளை முதல் வெங்காயம் விற்பனை; வெளிச் சந்தைகளில் வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை.
* ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு: அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநருடன் சந்திப்பு.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்.
7.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தல்.
* தமிழக வேட்பாளர்கள் கூடுதலாக செலவு செய்யலாம்
தமிழகத்தில் எம்பி தேர்தலில் 77 லட்சமும் எம்எல்ஏ தேர்தலில் 30.9 லட்சம் வரை செலவு செய்யலாம். வேட்பாளர்கள் செலவு செய்வதை 10 சதவீதம் உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு. மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மாற்றப்பட்ட வேட்பாளர்கள் செலவின பட்டியல் வெளியீடு.
* சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு. கொரோனா சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதை தடுக்காததால் குமரன் சில்க்ஸ் கடை மீது நடவடிக்கை.
* நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அன்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். - அண்ணா பல்கலைக்கழகம்.
* திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குவதை எதிர்த்த கேரள அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் எனவும் , ஏற்கனவே முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை அக்.23 வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவசங்கரன் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
* கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆர்பிஐ பதில்அளித்துள்ளது . கூட்டுறவு வங்கிகளை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்த வழக்குகள் ஆறு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
No comments