Header Ads

மூழ்கிய தாமரை - சிறுகதை

✍️ | ஜெயஸ்ரீ பொன்னம்பலம். (சிறுகதை எழுத்தாளர்.)

பொதுவாக நாம் அனைவரும் அறிந்ததே, தாமரை மலர் நீரில் மூழ்காமல் இருக்கும் என்று......!!!!!

ஆனால் இக்கதையிலோ தாமரைக்கும் இழப்பு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக எழுதப்பட்டது. வாருங்கள் கதைக்குள் செல்வோம்.

அந்த தாமரையின் அழகை எளிதில் யாராலும் வர்ணிக்க முடியாது.ஏனென்றால்,அவள் அவ்ளோ அழகு. அவள் கண்ணில் கண்மையிட்டு,கண்ணை சுழட்டினால் போதும் மயங்காத ஆளே இல்லை.அவளின் சிரிப்போ‌ தாமரை மொட்டு விரிதல் போல் தெளிவாகவும்,அழகாகவும் இருக்கும். எவ்வளவு நீரோட்டம் இருந்தாலும் தாமரை எப்படி மூழ்காமல் இருக்குமோ.....? அதே போல் தான் அவளின் மனமும்,பேச்சும் தடுமாற்றம் இன்றி தெளிவாக இருக்கும்.

அவள் பெயர் தாமரை!

அவள் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்.அவளின் பேச்சுக்கு மயங்காத ஆளே இல்லை.அதுமட்டுமின்றி அவளின் தைரியமும் யாராலும் அளக்க முடியாது.அவளின் தையிரத்திற்கு ஈடாக அவளது பணிவும் இருக்கும்.இப்படி சீராக சென்ற‌ அவள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏமாற்றம் வரும் என்று அவளும் எதிர் பார்த்திருக்க மாட்டாள்.

நாட்கள் சென்றது....!

திருமண வயதை அடைந்தாள்.இவளும் பெரிதாக ஒன்றும்  12-ஆம் வகுப்பு தான் படித்திருந்தாள்.ஆனால் அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டாரோ அவளின் பணிவை பயன்படுத்தி அவளைத் தன் வசம் இழுத்தனர்.அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையோ படிப்பறிவு பெரிதாக இல்லை என்றாலும்,தன் நாட்டிற்காக உழைக்கும் இராணுவப் பணியில் இருந்தார்.

வரதட்சணைக்கு பஞ்சமின்றி பெண் வீட்டார் அள்ளிக் குடுக்க,ஆண் வீட்டாரோ தன் உண்மை முகத்தை மறைத்து சிரித்த முகமூடி அணிந்து அனைத்தையும் வாங்கி கொண்டனர்.

(திருமணமும் முடிந்தது.கண்ணீரோடு மணப்பெண்ணை வழி அனுப்பி வைத்தனர்.)

திருமணமாகி ஒரு மாதம் கழிந்தது.மாப்பிள்ளையோ தனது கடமையே செய்ய புறப்பட்டான்.

(உன்னை காண சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லி கொண்டு........)

அவனோ சுதந்திரமாகப் புறப்பட்டான்.அவளோ கூண்டுக்குள் அடைக்கப்பட்டாள்.ஆம்.அவளின்‌ மாமியாரோ,அடுத்த‌ தெரு கடைக்குக்‌கூட‌ அனுப்புவதில்லை.வரதட்சனை குடுத்த வேலைக்காரியாக அந்த வீட்டில் வாழ்ந்தாள். 

அவளின் பெற்றோரிடம் பேசக் கூட அவளுக்கு அனுமதி இல்லை.கணவரும் இராணுவப் பணியில் ‌இருப்பதால் கணவனாலும் தொடர்ந்து பேச‌ முடியாது.அவளின் திறமைகளை அவர்கள் காணடித்தனர்.அவளின் வாழ்க்கை கண்ணீரோடு கழிந்தது.கணவனின் புகைப்படத்தை வைத்துக் கொண்டே காலத்தை கழித்து வந்தாள்.அவனும் தன் வாக்குப்படி அவளைக்‌ காண வரவில்லை.

 (அவனை எதிர்ப்பார்த்து,அடுப்பங்கரையில் கரைந்தால்.)

இவள் மட்டுமின்றி,இவளைப் போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக தங்கள் திறமைகளை மறைத்துக் கொண்டு தான் வாழ்கின்றனர்.பெண்கள் இன்னும் எவ்வளவு காலம் தான் அடிமையாக வாழ முடியும்....??

வரதட்சணைக்காக முகமூடி அணிந்து திரியும் பல கொள்ளையர்களே......

 நீங்கள் ஒருப் பெண்ணின் வாழ்க்கையை மட்டுமில்லை,அவளின் திறமை,மன தைரியம்,சுயஇன்பம், தன்னலம்,தன் வாழ்வைப்‌ பற்றி யோசிக்க கூட வாய்ப்பளிகாமல் அவளின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சீரழித்து நாசம் செய்கின்றீர்கள்.

பணத்தைப் பற்றி மட்டும் யோசிக்கமால் ஒருப் பெண்ணுக்கு மனம் இருக்கு‌ என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

கருத்து: “வெள்ளமும்,புயலும் ஒன்றாக வந்தால் கல்லால் ஆன அணையை உடைத்துக் கொண்டு போகும் போது, மெல்லிய இதழ் கொண்ட தாமரை மூழ்கத் தான வேண்டும்....???”

இக்கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை  வரவேற்கிறேன்.

No comments

Powered by Blogger.