Header Ads

சாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார்.

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* சாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சாங்கை உருவாக்கிய லீ குன் ஹீ காலமானார்.

* சென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குபதிவு. அரசு உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் தொல்.திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து. இந்த திருநாள் தொற்றுநோயிடம் இருந்து நம்மை பாதுகாத்து, நாட்டு மக்களுக்கு செழிப்பை அளிக்கட்டும் என குடியரசு தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

* பட்டாபிராம் பகுதியில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து 5 சவரன் தங்க நகை, 3 செல்போன்கள் மற்றும் இரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை உறுதி. தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் தீவிர மூச்சுத் திணறலும் இருக்கிறது; நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளது!" - மருத்துவமனை அறிக்கை.

* தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் -  தமிழக அரசு உத்தரவு. காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம். திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம். காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

* ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு: சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு. போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு.

* வருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு: வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசத்தை மேலும் நீட்டித்து அடுத்த வருடம் ஜனவரி 31ம் தேதி என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.